சுனில் நரைன் படங்கள்: கேகேஆர் / எக்ஸ்
ஐபிஎல்

விக்கெட் எடுத்தபின் ஏன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை?: சுனில் நரைன் பதில்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் பேட்டியளித்துள்ளார்.

DIN

இந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ) அணி சிறப்பாக விளையாடி வருகிறது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதில் சுனில் நரைனின் பங்கு முக்கியமாக உள்ளது.

பேட்டிங்கில் 461 ரன்கள், பௌலிங்கில் 14 விக்கெட்டுகள் என ஆல்ரவுண்டராக அசத்தி வருகிறார். இவரது சிறந்த செயல்பாடுகளைப் பார்த்த மே.இ.தீ. அணியின் கேப்டன் ரோமன் பவல் உலகக் கோபையில் விளையாட ஒரு வருடமாக சுனில் நரைனை கேட்டுக்கொண்டு உள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

விக்கெட் எடுத்தாலும் ரன் அடித்தாலும் பெரிதாக கொண்டாடாத வீரராக இருப்பவர் சுனில் நரைன். சமீபத்தில் ஆவேஷம் படத்தின் ரீல்ஸை செய்திருந்தார். அதிலும் சிரிக்காமலே செய்திருப்பார்.

இந்நிலையில் கேகேஆர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் விக்கெட் எடுத்தால் ஏன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுனில் நரைன், “வளரும் பருவத்தில் நான் எனது தந்தையிடம் இருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். அது என்னவென்றால் இன்று நான் ஒருவரை விக்கெட் எடுத்தால் நாளை அல்லது அடுத்த நாள் எப்போதாவது மீண்டும் அவருடன் விளையாட நேரிடும். அதனால் அந்தக் கணத்தை மட்டுமே நேசிக்க வேண்டுமே தவிர அதீதமாக கொண்டாடக்கூடாது” எனக் கூறினார்.

ரசிகர்கள் இவரது கருத்துக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT