ஸ்டீஃபன் பிளெமிங் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

எங்களது திட்டங்களை தடுத்து நிறுத்திய ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்: சிஎஸ்கே பயிற்சியாளர்

ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷனின் அபாரமான பேட்டிங் தங்களது திட்டங்களை தடுத்துவிட்டதாக சிஎஸ்கேவின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

DIN

ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷனின் அபாரமான பேட்டிங் தங்களது திட்டங்களை தடுத்துவிட்டதாக சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 35 ரன்கள் வித்தியாசத்தில் சிஸ்கேவை வீழ்த்தியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இருவரும் சதம் விளாசி அசத்தினர்.

இந்த நிலையில், ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷனின் அபாரமான பேட்டிங் தங்களது திட்டங்களை தடுத்துவிட்டதாக சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்றவாறு சிறப்பானதாக இருந்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள முதல் ஓவரிலிருந்தே எங்களது திட்டங்களை தடுத்து வந்தனர். போட்டியின் பிற்பகுதியில் சிறிது ரன்களைக் கட்டுப்படுத்தினோம். எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் சிறப்பாக விளையாடினர். கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய சாய் சுதர்ஷன் சிஎஸ்கேவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 96 ரன்கள் எடுத்தார். அவரை நான் கூர்ந்து கவனித்தேன். அவர் மிகச் சிறந்த வீரர். அதனை இன்று அவர் நிரூபித்துவிட்டார் என்றார்.

நேற்றையப் போட்டியில் ஷுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்ஷன் 103 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

SCROLL FOR NEXT