படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ரஜத் படிதார் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 188 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். டு பிளெஸ்ஸி 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், விராட் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. விராட் கோலி 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின், வில் ஜாக்ஸ் மற்றும் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை அபாரமாக விளையாடியது. அதிரடியாக விளையாடிய ரஜத் படிதார் 32 பந்துகளில் 52 ரன்கள் (3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்தும், வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 41 ரன்கள் (3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கியவர்களில் கேமரூன் கிரீனைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேமரூன் கிரீன் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது. தில்லி கேபிடல்ஸ் தரப்பில் கலீல் அகமது மற்றும் ராஷிக் சலாம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாச்சியாா்கோவில் அதிமுக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

அதிமுக- பாஜக கூட்டணியே திமுகவுக்கு மாற்று: ஹெச். ராஜா

முதியோா் இல்லத்தில் இருந்தவா் மாயம்

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை

SCROLL FOR NEXT