நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. 3ஆண்டுகளுக்குப் பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கும் தேர்வாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர்.
இதற்கு முக்கிய காரணம் கேப்டன் கம்மின்ஸ். ஹைதரபாத அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய மண்ணில் பல லட்சம் மக்களை அமைதியாக்குவது மிகவும் பிடிக்கும் எனக் கூறி அதேபோல் விராட் கோலி விக்கெட்டினை வீழ்த்தி, மைதானத்தில் இந்திய மக்களை அமைத்தியாக்கினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றார். மேலும் ஆஷஸ் தொடரினையும் தக்க வைத்துக்கொண்டார்.
தற்போது ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கேப்டன்சி பொறுப்பேற்று அசத்தி வருகிறார். தமிழக வீரர் நடராஜன், மூத்த பௌலர் உனத்கட் ஆகியோர் கம்மின்ஸின் கேப்டன்சியை புகழ்ந்திருந்தனர்.
கேப்டனாக தனக்கென ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி வருகிறார் பாட் கம்மின்ஸ். ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்லாமல் அவர் ஆடும் அனைத்து அணிக்கும் உண்மையாக உழைத்து வருகிறார். கம்மின்ஸை கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
இந்தியாவின் கேப்டனாக எம்.எஸ். தோனி 3 விதமான ஐசிசி கோப்பையை வென்றிருந்தார். கம்மின்ஸ் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.