படம்: இன்ஸ்டா/ பாட் கம்மின்ஸ்
ஐபிஎல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

DIN

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. 3ஆண்டுகளுக்குப் பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கும் தேர்வாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர்.

இதற்கு முக்கிய காரணம் கேப்டன் கம்மின்ஸ். ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றார். மேலும் ஆஷஸ் தொடரினையும் தக்க வைத்துக்கொண்டார்.

தற்போது ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கேப்டன்சி பொறுப்பேற்று அசத்தி வருகிறார். தமிழக வீரர் நடராஜன், மூத்த பௌலர் உனத்கட் ஆகியோர் கம்மின்ஸின் கேப்டன்சியை புகழ்ந்திருந்தனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் அரசி பள்ளிக்கு சென்று அங்கு மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.

மாணவ மாணவிகளுடன் சந்தித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன.

ஆஸி. கேப்டனும் ஹைதராபாத் கேப்டனுமான பாட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில், “இந்தியாவில் மகிழ்ச்சியான நேரங்கள்” என புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிகப்பெரியளவில் கேள்விக்குறியாகி உள்ளது! -அகிலேஷ் யாதவ்

சென்ராயப் பெருமாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

SCROLL FOR NEXT