பாட் கம்மின்ஸ்  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

சன்ரைசர்ஸ் அணியின் இளம் வீரருக்கு பந்துவீசுவதற்கு பயமாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

DIN

சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மாவுக்கு பந்துவீசுவதற்கு பயமாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அதிரடியாக 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.

அபிஷேக் சர்மா

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மாவுக்கு பந்துவீசுவதற்கு பயமாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பாட் கம்மின்ஸ் பேசியதாவது: அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு பந்துவீச நான் விரும்ப மாட்டேன். அவர் வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமல்லாமல், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் சுதந்திரமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதை பார்ப்பதற்கு பயமாக உள்ளது என்றார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT