முகப்பு
ஐபிஎல்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 19 மே, 2024 at 5:55 PM
- படம் | ஐபிஎல்
பகிர்:

சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய அதர்வா டைடு 27 பந்துகளில் 46 ரன்களும் (5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்), பிரபசிம்ரன் 45 பந்துகளில் 71 ரன்களும் (7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ரைலி ரூசோவும் அதிரடியான ஆட்டத்தைத் தொடர்ந்தார். அவர் 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் ஜித்தேஷ் சர்மா 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

Advertisement

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்துள்ளது. சன் ரைசர்ஸ் தரப்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாட் கம்மின்ஸ் மற்றும் வியாஸ்காந்த் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.