படம் | ஐபிஎல்
ஐபிஎல்

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அசத்தல்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DIN

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய அதர்வா டைடு 27 பந்துகளில் 46 ரன்களும் (5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்), பிரபசிம்ரன் 45 பந்துகளில் 71 ரன்களும் (7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ரைலி ரூசோவும் அதிரடியான ஆட்டத்தைத் தொடர்ந்தார். அவர் 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் ஜித்தேஷ் சர்மா 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்துள்ளது. சன் ரைசர்ஸ் தரப்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாட் கம்மின்ஸ் மற்றும் வியாஸ்காந்த் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் களமிறங்கியது.

அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே அர்ஷ்தீப் பந்துவீச்சில் போல்டானார். அதன்பின் அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. இருப்பினும், ராகுல் திரிபாதி 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, நிதீஷ் ரெட்டி மற்றும் கிளாசன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. நிதீஷ் ரெட்டி 25 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தும், கிளாசன் 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 19.1 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்பிரீத் பிரார் மற்றும் ஷஷாங் சிங் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 17 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

SCROLL FOR NEXT