எம்.எஸ்.தோனி படம் | சிஎஸ்கே (எக்ஸ்)
ஐபிஎல்

தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள்!

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்தனர்.

DIN

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்தனர்.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று முன் தினம் (ஏப்ரல் 8) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது.

தோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்ற பஞ்சாப் வீரர்கள்

சிஎஸ்கே - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர்கள் பலரும் எம்.எஸ்.தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் தோனியிடம் ஆட்டோகிராஃப் பெறும் விடியோவினை சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே நாளை (ஏப்ரல் 11) சேப்பாக்கம் திடலில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

SCROLL FOR NEXT