சுனில் நரைன் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக அதிகமாக ஆட்ட நாயகன் விருதுவென்ற வீரராக புதிய சாதனை படைத்தார்.
நேற்றிரவு சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் சுனில் நரைன் தனது சுழல் பந்து வீச்சினால் சிஎஸ்கே பேட்டர்களை திணறடித்தார்.
4 ஓவர்கள் வீசிய சுனில் நரைன் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பௌலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 18 பந்துகளில் 44 ரன்கள் குவித்து மிரட்டினார். அதனால், ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.
ஐபிஎல் வரலாற்றில் இது சுனில் நரைனுக்கு 16ஆவது ஆட்ட நாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக கேகேஆர் அணிக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் 15 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
ரஸ்ஸலை முந்தி சுனில் நரைன் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் ஏபிடி வில்லியர்ஸ் 25 முறை ஆட்டநாயகன் விருது வாங்கி முதலிடத்தில் இருக்கிறார். அடுத்ததாக கிறிஸ் கெயில் (22), ரோஹித் சர்மா (19), விராட் கோலி (18), வார்னர் (18), தோனி (17) இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.