ஜெய்பூரில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பேட்டிங் செய்துவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 107/2 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இந்த சீசனில் சுமாராக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் தற்போது சிறப்பாக விளையாடி ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
50 ஐபிஎல் போட்டிகளில் 1,700க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ள ஜெய்ஸ்வால் தற்போது 11ஆவது அரைசதத்தினை நிறைவு செய்துள்ளார்.
ஜெய்பூர் திடலில் தனது 3ஆவது அரைசதத்தையும் இதன் மூலம் நிறைவு செய்துள்ளார்.
சுழல்பந்துகளுக்கு சாதகமான ஜெய்பூர் பிட்ச்சில் 84 சதவிகிதம் கட்டுப்பாட்டில் விளையாடி வருகிறார்.
தேவையில்லாமல் பேட்டினை சுற்றாமல் பந்தினைப் பார்த்து அடித்து சிறப்பாக விளையாடி 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.