கே.எல்.ராகுல் - விராட் கோலி  
ஐபிஎல்

விராட் கோலி, டேவிட் வார்னர் சாதனைகளை முறியடித்த கே.எல். ராகுல்!

விராட் கோலி, வார்னர் சாதனைகளை முறியடித்து கே.எல்.ராகுல் அசத்தல்.

DIN

டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோரின் சாதனைகளை முறியடித்து தில்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர் கே.எல்.ராகுல் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. அதிரடியாக விளையாடிய தில்லி அணியின் கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 57* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் 51 ரன்கள் எடுத்தபோது கே.எல்.ராகுல் ஐபிஎல்லில் புதிய சாதனை ஒன்றை படைத்தார். ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் இந்த ரன்களை எடுக்க 130 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டுள்ளார்.

ராகுலுக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 135 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. மேலும், விராட் கோலி, ரோஹித் சர்மா, தவான், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, தோனி, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரைத் தொடர்ந்து 5000 ரன்களை எட்டிய 8-வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் ராகுல்.

ஐபிஎல் தொடரில் அதிவேக 5000 ரன்கள்!

  • கே.எல்.ராகுல் - 130 இன்னிங்ஸ்

  • டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ்

  • விராட் கோலி - 157 இன்னிங்ஸ்

  • ஏபி டிவில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ்

  • ஷிகர் தவான் - 168 இன்னிங்ஸ்

இந்தத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல், 3 அரைசதங்களுடன் 323 ரன்கள் குவித்து அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: பெஹல்காம் தாக்குதல்: ஐபிஎல்லில் மௌன அஞ்சலி செலுத்த ஏற்பாடு! - பிசிசிஐ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொம்புசீவி டீசர்!

உத்தரகண்ட்டில் அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு எதிரொலி: தேர்வு ரத்து!

பிரதமர் மோடியை சந்தித்து பரிசளித்த இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்!

மே.இ.தீவுகள் பயிற்சியாளர், கேப்டனிடம் தனித்தனியாக பேசிய பிரையன் லாரா!

கருப்பு முதல் பாடல் அப்டேட்!

SCROLL FOR NEXT