ஷ்ரேயாஸ் ஐயர் படம்: எக்ஸ் / பஞ்சாப் கிங்ஸ்.
ஐபிஎல்

மிகவும் நொந்துவிட்டேன்..! தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன்!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது குறித்து பஞ்சாப் கேப்டன் பேசியதாவது...

DIN

ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது குறித்து பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசும்போது, “பாதி வேலைதான் முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு நிச்சயமாக கோப்பையை வெல்ல வருவோம்” எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் சீசனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸை இறுதிப் போட்டிக்கு ஷ்ரேயாஸ் அழைத்து வந்தார். இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது.

ரன்னர் அப் விருதைப் பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக ரூ.12.50 கோடியைப் பரிசாகப் பெற்றார்.

குவாலிஃபயர் 2-இல் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் இறுதிப் போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தோல்வி குறித்து அவர் பேசியதாவது:

மிகவும் நொந்துவிட்டேன்

உண்மையை சொல்ல வேண்டுமானால் மிகவும் நொந்துவிட்டேன். ஆனால், பஞ்சாப் அணி வீரர்கள் விளையாட விதத்தை நினைத்து மகிழ்கிறேன்.

மாசற்ற அணியாக இல்லாவிட்டாலும் அணி நிர்வாகம், உதவியாளர்கள், இந்த அணிக்காக பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் இந்தப் புகழ் சென்று சேர வேண்டும். அவர்கள் இல்லாமல் நாங்கல் இங்கில்லை. அணி நிர்வாகியின் ஒத்துழைப்பும் மிகவும் அசத்தலானது.

கடைசி போட்டியுடன் இதை ஒப்பிடும்போது 200 ரன்கள் போதுமானதென நினைத்தேன். ஆர்சிபி நன்றாக பந்துவீசினார்கள். குறிப்பாக க்ருணால் பாண்டியா, அவர் தனது அனுபவத்தை பயன்படுத்தினார்.

பாதி வேலைதான் முடிந்திருக்கிறது...

பல இளைஞர்கள் தங்களது முதல் சீசனில் விளையாடினார்கள். இந்த சீசனில் இளைஞர்களின் பயமறியாத தன்மை மிகவும் அற்புதமாக இருந்தது.

இளைஞர்களுக்கு இந்தப் போட்டிகளின் மூலம் அனுபவம் கிடைத்திருக்கும். அடுத்தாண்டு இந்த அனுபவத்துடன் வருவார்கள். அத்துடன் சில திட்டங்களை வகுத்து நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம்.

பாதி வேலைதான் முடிந்துள்ளது. அடுத்தாண்டு கோபையை வெல்ல மீண்டும் வருவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

SCROLL FOR NEXT