வருண் சக்கரவர்த்திக்கு சிறப்பு போஸ்டரை வெளியிட்ட திண்டுக்கல் டிராகன்ஸ், கேகேஆர் அணிகள். படங்கள்: எக்ஸ் / திண்டுக்கல் டிராகன்ஸ், கேகேஆர்.
ஐபிஎல்

அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த தமிழன்..! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய சாதனை குறித்து...

DIN

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்து வருண் சக்கரவர்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேற்றிரவு (மே.7) வீழ்த்தியது.

தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணிக்காக சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதற்காக வருண் சக்கரவர்த்திக்கு திண்டுக்கல் டிராகன்ஸ், கேகேஆர் அணிகள் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள்

82 இன்னிங்ஸ் - வருண் சக்கரவர்த்தி

83 இன்னிங்ஸ் - யுஸ்வேந்திர சஹால்

83 இன்னிங்ஸ் - ரஷித் கான்

83 இன்னிங்ஸ் - அமித் மிஸ்ரா

85 இன்னிங்ஸ் - சுனில் நரைன்

இந்தப் போட்டியில் ஐபிஎல் விதிமுறை 2.5-இன் படி லெவல் 1 குற்றத்திற்காக கேகேஆர் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

SCROLL FOR NEXT