முஸ்தஃபிசூர் ரஹ்மான்  படம் | முஸ்தஃபிசூர் ரஹ்மான் (எக்ஸ்)
ஐபிஎல்

தில்லி கேபிடல்ஸுக்காக முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவது உறுதி!

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நாளை (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.

தில்லி கேபிடல்ஸ் வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க்குக்குப் பதிலாக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இறுதிக்கட்ட போட்டிகளுக்காக தில்லி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக முஸ்தஃபிசூர் ரஹ்மான் புறப்பட்டதால், அவர் தில்லி கேபிடல்ஸுக்காக விளையாடுவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் ஏற்பட்டது.

விளையாடுவது உறுதி

தில்லி கேபிடல்ஸ் அணிக்காக மே 18 முதல் மே 24 வரையிலான போட்டிகளில் விளையாட முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக நாளை (மே 17) நடைபெறும் முதல் டி20 போட்டியில் விளையாடிய பிறகு, தில்லி கேபிடல்ஸ் அணியுடன் முஸ்தஃபிசூர் இணையவுள்ளார்.

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது. மே 18 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரையிலான போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற மே 25 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதன் காரணமாகவே, முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு மே 24 ஆம் தேதி வரை மட்டுமே தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், தில்லி கேபிடல்ஸ் அணிக்காக கடைசி மூன்று லீக் போட்டிகளில் மட்டுமே அவரால் விளையாட முடியும். தில்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், அவரால் அந்த போட்டிகளில் விளையாட முடியாது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் அணி, 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்கும் தில்லி அணிக்கு அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம்.

தில்லி கேபிடல்ஸ் அணி நாளை மறுநாள் (மே 18) தில்லியில் நடைபெறும் அதன் அடுத்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

ஹோண்டா காா்கள் விற்பனை உயா்வு!

பருவம் தவறி பெய்த மழை: பாதிக்கப்பட்ட ஏசி உற்பத்தியாளா்கள்

SCROLL FOR NEXT