ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஓவன் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கியவர் ரன் ஏதும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் மிட்செல் ஓவன் அறிமுகமாகியுள்ளார். பஞ்சாப் அணியில் ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் இல்லாத காரணத்தினால் இவரை ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார்.
மபாகா வீசிய ஓவரில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கிளன் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக மாற்று வீரராக மிடெல் ஓவன் களமிறங்கியிருந்தார்.
யார் இந்த மிட்செல் ஓவன்?
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான மிட்செல் ஓவன் 2021-ஆம் ஆண்டு பிக் பாஸ் லீக்கில் அறிமுகமானார். ஆனால், அவரால் தொடர்ந்து ரன் குவிக்க முடியவில்லை. இருப்பினும், 2024 - 25 ஆம் ஆண்டுக்கான பிக் பாஸ் லீக்கில் 11 போட்டிகளில் 2 சதங்களுடன் 452 ரன்கள் குவித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு டாஸ்மேனியா அணியில் ஒப்பந்தம் பெற்ற மிட்செல் ஓவன் 19 வயதுக்குள்பட்டோருக்கான அணியில் 60 சராசரியுடன் 415 ரன்கள் குவித்தார். இதன் தொடர்ச்சியாக அவருக்கு முதல் தரப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது.
லிஸ்ட் ஏ போட்டியில் 2021 ஆம் ஆண்டு டாஸ்மேனியாவுக்காகவும் 2023 ஆம் ஆண்டு தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் தரப் போட்டியிலும் விளையாடினார்.
பிக் பாஸ் தொடரில் 14-வது சீசனின் இறுதிப் போட்டியில் அதிவேக சதம் விளாசியதுடன் முதல் முறையாக ஹூபர்ட் ஹரிகேன்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கும் உறுதுணையாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.