படம் | AP
ஐபிஎல்

ரோஹித் சர்மா அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 229 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

ரோஹித் சர்மா அதிரடி; 229 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். மும்பை அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தது. இருப்பினும், அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். இருப்பினும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். திலக் வர்மா 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் ஹார்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

35 ஆண்டுகள் பழையது..! டியூக்ஸ் பந்து விவகாரத்தில் இந்திய அணி அதிருப்தி!

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

கடைசி நேரத்தில் மெஸ்ஸியின் அசிஸ்ட்... மீண்டும் ஆட்ட நாயகன் விருது!

திருப்பூர் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! வடமாநில இளைஞர் கைது!!

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

SCROLL FOR NEXT