ஸ்வப்னில் குசேல் 
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் 3ஆவது பதக்கம் வென்ற இந்தியா!

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வப்னில் குசேல் வெண்கலம் வென்றார்.

DIN

உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகின்றன.

2024-இல் பாரீஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை 33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

இதில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

இந்நிலையில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசேல் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

ஸ்வப்னில் குசேல் 451. 4 புள்ளிகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். சீனாவின் ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார்.

இந்தியாவுக்கு கிடைத்த 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசலில் தொடரும் கனமழை: கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு!

மறுவெளியீடாகும் ரன்!

சிரியா தலைநகரில்... இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

SCROLL FOR NEXT