லவ்லினா போர்கோஹைன் படம் : எக்ஸ்
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்: காலிறுதியில் வெளியேறினார் லவ்லினா!

குத்துச்சண்டை போட்டி காலிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை லவ்லினா, தோல்வி அடைந்தார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் குத்துச்சண்டை போட்டி காலிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை லவ்லினா, தோல்வி அடைந்தார். இதன்மூலம் ஒலிம்பிக் தொடரிலிருந்து அவர் வெளியேறினார்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 75 கிலோ எடைப் பிரிவில் பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டி இன்று (ஆக. 4) நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், சீனாவின் லி குயியன் உடன் மோதினார்.

விறுவிறுப்பான இப்போட்டியில் முதல் சுற்றில் 2 - 3 என்ற புள்ளிக் கணக்கில் லவ்லினா பின்தங்கியிருந்தார். இரண்டாவது சுற்றிலும் 3 - 2 என்ற புள்ளிக் கணக்கில் சீன வீராங்கனை முந்தினார். இதனால் காலிறுதிப் போட்டியில் லவிலினா தோல்வி அடைந்தார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து அவர் வெளியேறினார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய குத்துச்சண்டை வீரர் நிஷாந்த் தேவ் காலிறுதிப் போட்டியில் மெக்ஸிகோவின் மோர்கோ வெர்டேவிடம் இன்று தோல்வி அடைந்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

பாஜகவிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் தலைவர்!

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT