ஒரே நாளில் 4 தங்கம், 2 வெண்கலம்: வரலாற்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா!
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியா ஒரே நாளில் 4 தங்கங்களை வென்று அசத்தியுள்ளது.
33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் கடந்த மாதம் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
உலக நாடுகள் பலவற்றைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சா்வதேச களத்தில் தங்கள் தேசத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் பதக்கங்களை குவித்து வருகின்றனா்.
கிரிக்கெட்டுக்கு பெயர்போன ஆஸ்திரேலிய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கிலும் அசத்தி வருகிறார்கள். ஒரே நாளில் 4 தங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
5 மணி நேரத்தில் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்கள். மொத்தமாக 18 தங்கங்களை வென்று ஆஸ்திரேலிய அணி வரலாற்றில் அதிகபட்ச பதங்கங்களை வென்று அசத்தியுள்ளார்கள்.
18 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம் உடன் மொத்தமாக 41 பதங்கங்களுடன் 3ஆவது நிலையில் இருக்கிறார்கள். இதற்கு முன்பாக டோக்கியோ, ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 17 தங்கம் வென்றிருந்தார்கள்.
முதலிடத்தில் அமெரிக்காவும் 2ஆவது இடத்தில் சீனாவும் இருக்கிறார்கள். இந்திய அணி 67ஆவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.