வினேஷ் போகத் Din
ஒலிம்பிக்ஸ்

வினேஷ் போகத்துக்கு பதக்கம் வென்றவருக்கான வரவேற்பு, வெகுமதி! ஹரியாணா அரசு

வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கான அனைத்து பரிசுகளும் வழங்கப்படும் என அறிவிப்பு.

DIN

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருக்கான அனைத்து மரியாதையும் வழங்கப்படும் என்று ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பும் வினேஷ் போகத்துக்கு, வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு வழங்கப்படும் வரவேற்பும், மரியாதையும் வழங்கவும், வெகுமதி மற்றும் வசதிகள் செய்து தருவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் தொடரின் 50 கிலோ பெண்கள் எடை பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், புதன்கிழமை காலை கூடுதலாக 100 கிராம் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அரையிறுதியில் போகத்திடம் தோற்ற வீராங்கனை இறுதிப் போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை நாடியுள்ள வினேஷ் போகத், அரையிறுதியில் வெற்றி பெற்றதால் வெள்ளிப் பதக்கம் கோரியுள்ளார்.

அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே, என்னிடம் இனி போராட சக்தியில்லை என்று தெரிவித்த வினேஷ் போகத், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்து இன்று காலை அதிர்ச்சி அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

ஹரியாணா ஐஜி தற்கொலை: டிஜிபி-க்கு கட்டாய விடுப்பு!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

SCROLL FOR NEXT