மானு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலம் வென்றது: இந்தியாவுக்கு 2-வது பதக்கம்!
ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் மானு பாக்கர்.
ஒலிம்பிக்ஸ்மானு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலம் வென்றது: இந்தியாவுக்கு 2-வது பதக்கம்!
ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் மானு பாக்கர்.
பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மானு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
துப்பாக்கி சுடுதலில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் மானு பாக்கர் ஏற்கெனவே பதக்க கணக்கை தொடங்கியிருந்தார்.
இந்நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.
இதன்மூலம், ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியர், ஒலிம்பிக் தொடர்களில் இரண்டு பதக்கங்களை வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை மானு பாக்கர் பெற்றுள்ளார்.
இந்தியாவின் சுஷில் குமார், பிவி சிந்து ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை முன்னதாக படைத்திருந்தனர்.
வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறும் 25 மீட்டர் பிஸ்டல் சுற்றில் கலந்து கொள்ளவுள்ள மானு தாக்கர், பதக்கத்தை வெல்லும் பட்சத்தில், மூன்று பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் ஆவார்.