ஸ்வப்னில் குசேல் 
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ்: இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்ற ஸ்வப்னில்! துப்பாக்கி சுடுதலில் 3ஆவது பதக்கம் வெல்ல வாய்ப்பு!

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வப்னில் குசேல்.

DIN

உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகின்றன.

2024-இல் பாரீஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை 33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

இதில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

இந்நிலையில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவர் தகுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசேல் 590 புள்ளிகளுடன் 7ஆம் இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

மற்றுமொரு இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 11ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.

அதனால் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் இன்னொரு பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது. இறுதிப் போட்டி ஆக.1 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு வெண்கலப் பதக்கச் சுற்றில் மானு பாக்கர்/சரப்ஜோத் சிங் இணை 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் லீ வோன்ஹோ/ஒஹ் யெ ஜின் இணையைச் சாய்த்து பதக்கத்தை வென்றது.

முன்னதாக, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை மானு பாக்கர் வெண்கலம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

பா.ஜ.க. அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ.88.27 ஆக நிறைவு!

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

SCROLL FOR NEXT