ஸ்பெஷல்

இறுதிச்சுற்றில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள்: சென்னைக்குச் சாதகமாக உள்ள புள்ளிவிவரம்!

முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் இறுதிச்சுற்றில் மோதுவது இது முதல்முறையல்ல..

எழில்

ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று நாளை நடைபெறவுள்ளது. புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் இறுதிச்சுற்றில் மோதுகின்றன.

இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் இறுதிச்சுற்றில் மோதுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு ஐந்துமுறை இதுபோல நடைபெற்றுள்ளன.

இறுதிச்சுற்றில் மோதிய முதலிரண்டு அணிகள்

பெங்களூர் v சென்னை, 2011
சென்னை v மும்பை, 2013
பஞ்சாப் v கொல்கத்தா, 2014
சென்னை v மும்பை, 2015
மும்பை v புணே, 2017
ஹைதராபாத் v சென்னை, 2018

இதில் 2017-ல் மட்டும் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை, ஐபிஎல் கோப்பையையும் வென்றது. மற்ற ஐந்து வருடங்களிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்த அணிகளே கோப்பையை வென்றுள்ளன.

இதே நிலைமை இந்த வருடமும் தொடருமா? சென்னை ஐபிஎல் கோப்பையை வெல்லுமா? அல்லது மும்பையின் சாதனையை ஹைதராபாத்தும் தொடருமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT