முகப்பு
செய்திகள்

ஹர்பஜனுடன் சண்டையா? அஸ்வினின் குறும்பு பதில்!

உங்களுக்கும் ஹர்பஜனுக்கும் சண்டையா என்று அஸ்வினிடம் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு அஸ்வின் குறும்பாக...

Updated On : 14 அக்டோபர், 2016 at 11:03 AM
பகிர்:

கடந்த சில வாரங்களாக, இந்திய மைதானங்களின் ஆடுகளம் குறித்து பேசிவருகிறார் ஹர்பஜன் சிங். சுழல்பந்துக்குச் சாதகமான ஆடுகளங்களால் விக்கெட்டுகள் எடுப்பது மிகவும் எளிதாகிவிட்டது. இதுபோல எனக்கும் கும்ப்ளேவுக்கும் அமைந்திருந்தால் இன்னும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்திருப்போம் என்று அவர் கூறிவருகிறார். இதற்கு கோலி பதிலளித்த நிலையில், பலரும் ஹர்பஜனின் பேச்சைக் கண்டித்துவருகிறார்கள். அஸ்வினின் சாதனைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று முன்னாள் வீரர் மனீந்தர் சிங்கும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.   

இதனை முன்வைத்து அஸ்வினிடம் ட்விட்டரில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்களுக்கும் ஹர்பஜனுக்கும் சண்டையா என்று அஸ்வினிடம் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு அஸ்வின் குறும்பாக, அவ்வளவு சத்தமாவா கேட்குது என்று சினிமா வசனத்தைப் பதிலாக அளித்தார். அஸ்வினின் இந்தக் குறும்பான பதில் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.