முகப்பு
செய்திகள்

ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டி: கோப்பையை வெல்ல இந்தியா பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கித்  தொடரின் இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது.

செய்திகள்

ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டி: கோப்பையை வெல்ல இந்தியா பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கித்  தொடரின் இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

குயான்டன்: மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கித்  தொடரின் இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது.

நான்காவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆக்கிப் போட்டித் தொடர் மலேசியாவில் உள்ள குயான்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டங்கள்  சனிக்கிழமையன்று நடந்தது. இதில் முதலாவது அரையிறுதியில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற  இப்போட்டியின் முடிவில் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட் அவுட்’ கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை  வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணியின் கோல்கீப்பரும், கேப்டனுமான ஸ்ரீஜேஷ் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இவர் கணுக்கால் காயத்தில் இருந்து குணமடைந்து சமீபத்தில்தான்  அணிக்கு திரும்பிஇருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மலேசிய அணியை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இந்திய அணி இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. இரண்டு முறை ஆசிய சாம்பியனான  இந்திய அணி 3-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →