ஐபிஎல்: பெளலிங், பேட்டிங்கில் அசத்தும் ஹைதராபாத் வீரர்கள்!
இந்த வருட ஐபிஎல் போட்டியில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களில்...
செய்திகள்ஐபிஎல்: பெளலிங், பேட்டிங்கில் அசத்தும் ஹைதராபாத் வீரர்கள்!
இந்த வருட ஐபிஎல் போட்டியில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களில்...
இந்த வருட ஐபிஎல் போட்டியில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் ஹைதராபாத் அணி வீரர்கள் உள்ளார்கள்.
5 ஐபிஎல் ஆட்டங்களில் 15 விக்கெட்டுகள் எடுத்து புவனேஷ்வர் குமார் முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், 9 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-ஆவது லீக் ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபைத் தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். பஞ்சாப் தொடக்க வீரர் மனன் வோரா 50 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் தோல்வி தவிர்க்க முடியாததானது. ஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கானை ரூ.4 கோடிக்கும், முகமது நபியை ரூ.30 லட்சத்துக்கும் ஐபிஎல் ஏலத்தில் ஹைதராபாத் அணி வாங்கியது. ஐக்கிய அரபு அமீரக வீரர் சிராக் சூரியை ரூ.10 லட்சத்துக்கு குஜராத் அணி வாங்கியது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். மேற்கண்ட மூவரும் நெதர்லாந்தின் ரியான் டென்தஸ்சாத்தேவுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள். இவர்களில் ரஷித் கான் பெளலிங்கில் அசத்தி அதிகக் கவனம் பெற்றுள்ளார்.
பேட்டிங்கில் ஹைதரபாத் வீரரான வார்னர் 5 ஆட்டங்களில் 235 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதுபோன்ற வீரர்களின் அபாரமான பங்களிப்பால் ஹைதராபாத் அணி 5 ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா, மும்பை அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன.