செய்திகள்

கொழும்பு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: 2-0 என தொடரை வென்றது

Raghavendran

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், 2-ஆவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளெர் செய்தது. இதன்பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தது.

இதனால் அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக டிக்வெல்லா 51 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின், 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 439 ரன்கள் பின்தங்கி ஃபாலோ ஆன் பெற்ற நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை இலங்கை தொடர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவித்தனர்.

துவக்க வீரர் திமுத் கருணாரத்னே 141 ரன்களும், குஷால் மெண்டீஸ் 110 ரன்களும் எடுத்தனர். இருப்பினும் இலங்கை அணி 386 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின், பாண்டியா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஈரோடு அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கொண்டாட்டம்

திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

சி.ஏ.பவுண்டேஷன் படிப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT