செய்திகள்

இந்திய அணியில் திடீர் மாற்றம்: தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது.

Raghavendran

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. 

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து தற்போது ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்க தொடர் நடைபெறும் நிலையில், தனக்கு ஓய்வு வேண்டியும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பிசிசிஐ-யிடம் விராட் கோலி ஓய்வு அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு ரோஹித் ஷர்மாவை இந்திய அணியின் கேப்டனாக பிசிசிஐ நியமித்தது. இதனிடையே முன்பு அறிவிக்கப்பட்ட ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சனிக்கிழமை தடீர் மாற்றம் செய்யப்பட்டது.

அதில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ், தசை பிடிப்பு காரணத்தால் காயமடைந்துள்ளதால் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சி பெற்று வருகிறார். 

முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் டிசம்பர் 9-ந் தேதி (நாளை) நடைபெறுகிறது. பின்னர் 13, 17 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், கேதர் ஜாதவ், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் அவருக்குப் பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வாஷிங்டன் சுந்தர், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கு இதில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணி விவரம் பின்வருமாறு:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, சித்தார்த் கௌல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெதர்லாந்தில்..! இஸ்ரேல் மீது தடை விதிக்க முடியாததால் பதவி விலகிய அமைச்சர்!

வியட்நாம் பாரம்பரியம்... ரவீனா ரவி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது! உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

SCROLL FOR NEXT