முகப்பு
செய்திகள்

டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார் பிரபல வீரர் சோம்தேவ் தேவ்வர்மன்!

இந்தியா சார்பாக ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்த பிரபல வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Updated On : 1 ஜனவரி, 2017 at 6:19 PM
பகிர்:

புதுதில்லி: இந்தியா சார்பாக ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்த பிரபல வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

31 வயது நிறைந்த தேவ்வர்மன் கடந்த 2008ம் ஆண்டில் இந்தியா சார்பாக ஒற்றையர் பிரிவு போட்டிகளில் கலந்து கொள்ளாத தொடங்கிய பின்னர் இந்தியாவின் பிரபல வீரரானார்.பல சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இவருக்கு இந்தியாவின் கவுரவமிக்க அர்ஜூனா விருது கடந்த 2011ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு ஏற்பட்ட தோள்பட்டை காயமானது அவரது விளையாட்டுத் திறனை கடுமையாக பாதித்தது. 

Advertisement

இந்நிலையில்தான் அவர் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிட்டுளார்.   

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

2017ம் ஆண்டினை புதியதொரு வகையில் தொடங்குகிறேன்.  தொழிற்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.  கடந்த வருடங்களில் எனக்கு அன்பு மற்றும் ஆதரவு வழங்கிய ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.  புது வருடம் ஒரு புதிய தொடக்கம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.