முகப்பு
செய்திகள்

முதல் டெஸ்ட்: ராகுல் விலகல்! அபினவ் முகுந்துக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து தொடக்க வீரர் ராகுல் விலகியுள்ளார்.

Updated On : 24 ஜூலை, 2017 at 3:52 PM
பகிர்:

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து தொடக்க வீரர் ராகுல் விலகியுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், காய்ச்சல் காரணமாக ராகுலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து அவர் முழுமையாக மீளவில்லை. இதையடுத்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அபினவ் முகுந்த் - ஷிகர் தவன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கவுள்ளார்கள்.

Advertisement

இந்தியா-இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.