இந்திய 'ஏ' அணி கேப்டன்கள் கருண் நாயர், மணீஷ் பாண்டே
தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய 'ஏ' அணியின் கேப்டன்களாக கருண் நாயர், மணீஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள்இந்திய 'ஏ' அணி கேப்டன்கள் கருண் நாயர், மணீஷ் பாண்டே
தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய 'ஏ' அணியின் கேப்டன்களாக கருண் நாயர், மணீஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய 'ஏ' அணியின் கேப்டன்களாக கருண் நாயர், மணீஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களுக்கான அணியின் கேப்டனாக கருண் நாயரும், ஒருநாள் ஆட்டங்களுக்கான அணியின் கேப்டனாக மணீஷ் பாண்டேவும் பொறுப்பு வகிக்க உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய 'ஏ' அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க 'ஏ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க 'ஏ' அணியுடன் 2 டெஸ்ட் ஆட்டங்களில் களம் காண்கிறது.
இதில் முத்தரப்பு ஒருநாள் தொடர், ஜூலை 26-ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது.
இந்திய 'ஏ' அணி விவரம்
ஒருநாள் ஆட்டம்: மணீஷ் பாண்டே (கேப்டன்), மன்தீப் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, கருண் நாயர், கிருணால் பாண்டியா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், அக்ஸர் படேல், யுவேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ், பாசில் தாம்பி, முகமது சிராஜ், ஷர்துல் தாகுர், சித்தார்த் கெளல்.
டெஸ்ட் அணி: கருண் நாயர் (கேப்டன்), பிரியங்க் பஞ்சல், அபினவ் முகுந்த், ஷ்ரேயாஸ் ஐயர், அங்கித் பாவ்னே, சுதிப் சாட்டர்ஜி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி, ஜெயந்த் யாதவ், ஷாபாஸ் நதீம், நவ்தீப் சாய்னி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், அனிகெத் செளதரி, அங்கித் ராஜ்புத்.