துளிகள்...
துளிகள்...
தேசிய மகளிர் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியின்ஷிப் போட்டியில், 'டிராப்' பிரிவில் ராஜஸ்தானின் ஷாகன் சௌதரி சாம்பியன் பட்டம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த நிவேதா, ஜூனியருக்கான 'டிராப்' பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெறத் தவறியதை அடுத்து, இத்தாலி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜியான் பியரோ வென்சுரா நீக்கம் செய்யப்பட்டார்.
ஊக்கமருந்து புகாரில் ரஷிய தடகள வீரர்கள் பலர் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டின் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் மீதான தடையை நீக்க சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு மறுத்துவிட்டது.