முகப்பு
செய்திகள்

நான் பெரிய தவறு எதுவும் செய்துவிடவில்லை: இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாவது குறித்து அஸ்வின் நம்பிக்கை

இதனால் நான் நம்பிக்கை இழக்கவும் இல்லை. ஒருநாள் எனக்கான வாய்ப்புகள் கதவைத் தட்டும்... 

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரையும் தவிர்த்துவிட்டு குல்தீப் யாதவ், சஹால், அக்‌ஷர் படேல் என இந்திய கிரிக்கெட் மற்ற பந்துவீச்சாளர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. இதனால் ஒருநாள், டி20 தொடர்களுக்கு அஸ்வின், ஜடேஜா தேர்வாவது குறித்த சந்தேகம் நிலவுகிறது.

இந்நிலையில் தமிழக அணியின் ரஞ்சி போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வின் இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது:

என்னைப் பொறுத்தவரை இந்திய அணிக்குத் தேர்வாவது என்பது அணிக்கு மீண்டும் திரும்புதல் கிடையாது. இதனால் நான் நம்பிக்கை இழக்கவும் இல்லை. ஒருநாள் எனக்கான வாய்ப்புகள் கதவைத் தட்டும். ஏனெனில் நான் பெரிய தவறு எதுவும் செய்துவிடவில்லை. ஆகவே, எனக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும்போது என் திறமையை இன்னும் கொஞ்சம் உயர்த்தி அணிக்குப் பங்களிப்பேன். 

குல்தீப் யாதவ் விளையாடிய போட்டிகளை இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. அவர் தரமான பந்துவீச்சாளர். இங்கிலாந்து நேரப்படி என்னால் இந்தியாவின் போட்டிகளைச் சரியான நேரத்தில் பார்க்கமுடியவில்லை என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →