முகப்பு
செய்திகள்

பளு தூக்குதல்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 10 பதக்கங்கள்

காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 3-ஆவது நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் உள்பட, 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 3-ஆவது நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் உள்பட, 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், ஆடவர் இளையோருக்கான 62 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முத்துப்பாண்டி ராஜா தங்கப் பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 110 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 150 கிலோ என மொத்தமாக அவர் 260 கிலோ எடையைத் தூக்கினார்.
அத்துடன், ஆடவர் ஜூனியருக்கான 62 கிலோ எடைப் பிரிவிலும் முத்துப் பாண்டி ராஜா 260 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சீனியர் மகளிருக்கான 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சரஸ்வதி ரெளத், 179 கிலோ (82+97) எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். ஜூனியர் மகளிருக்கான 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் எர்ரா தீக்ஷிதா 167 கிலோ (73+94) எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய வீரர் தீபக் லேதர் 3 பதக்கங்கள் வென்றார். ஆடவர் இளையோருக்கான 69 கிலோ எடைப் பிரிவிலும், ஜூனியர் ஆடவருக்கான 69 கிலோ எடைப் பிரிவிலும் அவர் தங்கம் வென்றார். சீனியர் ஆடவருக்கான 69 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 295 (138+157) கிலோ எடையைத் தூக்கி அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் வந்தனா குப்தா சீனியர் மகளிருக்கான 63 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார். உமேஷ்வரி, இளையோர் மகளிர் மற்றும் ஜூனியர் மகளிருக்கான 63 கிலோ எடைப் பிரிவில் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அடுத்து இந்தியாவில்...: இதனிடையே, 2019-ஆம் ஆண்டு காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு காமன்வெல்த் பளு தூக்குதல் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
 

முழு கட்டுரையைப் படிக்க →