ஐபிஎல் போட்டிக்குத் தடை கோரி வழக்கு: பிசிசிஐ, மத்திய அரசுக்கு நோட்டீஸ்!
2013-ல் சூதாட்ட விவகாரத்தில் ஐபிஎல் அணிகளுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது...
செய்திகள்ஐபிஎல் போட்டிக்குத் தடை கோரி வழக்கு: பிசிசிஐ, மத்திய அரசுக்கு நோட்டீஸ்!
2013-ல் சூதாட்ட விவகாரத்தில் ஐபிஎல் அணிகளுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது...
சூதாட்டத்தைத் தடை செய்யாமல் ஐபிஎல் போட்டியை நடத்தத் தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சூதாட்டத்தில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
2013-ல் சூதாட்ட விவகாரத்தில் ஐபிஎல் அணிகளுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது. சூதாட்டத்தைத் தடை செய்யாமல் நடக்கும் ஐபிஎல் போட்டியைத் தடை செய்யவேண்டும் என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் மத்திய அரசு ஆகியவை ஏப்ரல் 13-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.