செய்திகள்

டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி! கடைசி விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின்! 

கடைசியாக, ஆண்டர்சன் 11 ரன்களில் அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் மூன்றாவது டெஸ்டை இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில்...

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டை 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.

டெஸ்ட் தொடரில் 2-0 என்ற இங்கிலாந்து முன்னிலை பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்களையும், இங்கிலாந்து 161 ரன்களையும் எடுத்தன. இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் கோலி (103), புஜாரா (72), பாண்டியா (52) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. 

5-ம் நாளான இன்று 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து. கடைசியாக, ஆண்டர்சன் 11 ரன்களில் அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  இதனால் மூன்றாவது டெஸ்டை இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டுள்ளது. ரஷித் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியத் தரப்பில் பூம்ரா 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஷமி, பாண்டியா ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது டெஸ்ட், ஆகஸ்ட் 30 அன்று தொடங்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT