முகப்பு
செய்திகள்

ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்: ஆஸி. இளம் வீரர் சாதனை! (விடியோ)

ஜேக் ஜோன்ஸ் வீசிய 40-வது ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை செய்தார் டேவிஸ்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற யு-19 ஆடவர் நேஷனல் சாம்பியன்ஷிப்பில் இளம் வீரர் ஒல்லி டேவிஸ் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார்.

அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூ சவுத் வேல்ஸ் மெட்ரோ கேப்டன் 18 வயது ஒல்லி டேவிஸ், 115 பந்துகளில் 207 ரன்கள் எடுத்து அசத்தினார். நார்தர்ன் டெரிடரி அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 14 பவுண்டரிகளும் 17 சிக்ஸும் அடித்தார். இதனால் நியூ சவுத் வேல்ஸ் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 406 ரன்கள் குவித்தது. 

ஜேக் ஜோன்ஸ் வீசிய 40-வது ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை செய்தார் டேவிஸ்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments