முகப்பு
செய்திகள்

இந்திய அணியை 4-0 என வீழ்த்தினால் ஆஸி. அணிக்குக் காத்திருக்கும் பரிசு!

நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என ஆஸ்திரேலிய அணி வென்றால் அதற்கு மிகப்பெரிய பரிசு ஒன்று காத்திருக்கிறது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் டிசம்பர் 6 முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என ஆஸ்திரேலிய அணி வென்றால் அதற்கு மிகப்பெரிய பரிசு ஒன்று காத்திருக்கிறது.

ஆஸி. அணி 4-0 என வெல்லும் பட்சத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கமுடியும். தற்போது அந்த அணி 5-ம் இடத்தில் உள்ளது. 0-4 என பெரிய தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தால் முதலிடத்தில் உள்ள இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு இறங்கிவிடும். இரண்டாம் இடத்தில் தற்போது உள்ள இங்கிலாந்து அணி அதே இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். இதனால் ஆஸ்திரேலிய அணி முழு வெற்றியை அடைந்துவிட்டால் அது இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமையும். 

Advertisement

2016 அக்டோபர் முதல் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 25 மாதங்களாக இந்திய அணி தொடர்ந்து முதலிடம் வகிப்பது இதுவே முதல்முறை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏதாவது ஒரு டெஸ்டை டிரா செய்தாலே இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். தற்போது 116 புள்ளிகள் கொண்டுள்ள இந்திய அணி ஒருவேளை 4-0 என டெஸ்ட் தொடரை வென்றால் 120 புள்ளிகளைப் பெற்றுவிடும். அப்படி நிகழ்ந்தால் ஆஸ்திரேலிய அணி 6-வது இடத்துக்கு இறங்கிவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments