முகப்பு
செய்திகள்

நிதானமாக விளையாடிய புஜாரா: ரிக்கி பாண்டிங் விமரிசனம்!

106 ரன்கள் எடுக்க 319 பந்துகளைப் பயன்படுத்திய புஜாராவின் ஆட்ட உத்தியை ஆஸி. முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் விமரிசனம் செய்துள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

106 ரன்கள் எடுக்க 319 பந்துகளைப் பயன்படுத்திய புஜாராவின் ஆட்ட உத்தியை ஆஸி. முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் விமரிசனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேட்டியளித்ததாவது:

இந்தியாவின் உத்திகள் குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளன. புஜாராவின் நிதானமான ஆட்டம், இந்திய அணியின் வெற்றிக்கு உதவலாம். அல்லது அதுவே வெற்றி பெறாமல் போனதற்கான காரணமாகவும் அமையலாம். புஜாரா களத்தில் இருக்கும்போது ரன்ரேட்டை உயர்த்துவது மிகக்கடினம். இந்திய அணியில் நன்கு அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களும் வேகமாக ரன்கள் குவிக்காவிட்டால் ரன்ரேட் 2-லேயேதான் இருக்கும். இதைவைத்து டெஸ்ட் ஆட்டத்தை வெல்வது கடினம்.

புஜாரா ஆட்டமிழந்தபிறகு எந்தத் திசையில் செல்லவேண்டும் என்று அடுத்து வந்த வீரர்களுக்குத் தெரியவில்லை. நீண்ட நேரம் விளையாடி ஒரேயொருமுறை மட்டுமே பேட்டிங் செய்யவேண்டும் என்று எண்ணியதுபோல இருந்தது. அப்போதும் அவர்களுக்குத் தேவையான ரன்களை எடுக்கவில்லை. இந்த டெஸ்டில் பந்துவீச்சாளர்களைச் சோர்வடைய செய்து அடுத்த டெஸ்டை வெல்ல எண்ணக்கூடாது. வாய்ப்பு கிடைக்கும்போது முயற்சி செய்து வெல்லவேண்டும். அடுத்த வாரத்துக்கு யோசிக்கக்கூடாது. ஷாட்ர் பிட்ச் பந்துகளால் தான் கோலி இன்று ஆட்டமிழந்துள்ளார். ஆஸி. பந்துவீச்சாளர்கள் இதுபோல அடிக்கடி முயற்சி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்களுடன் டிக்ளேர் செய்துள்ளது. புஜாரா 106, கோலி 82, மயங்க் அகர்வால் 76 ரன்கள் எடுத்தார்கள். இதன்பிறகு 6 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரிஸ் 5, ஃபிஞ்ச் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →