முகப்பு
செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து டேல் ஸ்டெய்ன் விலகல்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

பந்துவீச்சின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:56 AM
பகிர்:

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்துவீச்சின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேனான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளன்று தெ.ஆ. வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெய்னுக்குக் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினார் ஸ்டெய்ன். அவர்களுடைய அறிவுரையின் பேரில் ஸ்டெய்ன் இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

ஸ்டெய்ன், காயத்திலிருந்து மீள எப்படியும் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகும் எனத் தெரிகிறது. அதற்குப் பிறகு மருத்துவர்களின் யோசனையின்படி மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.