செய்திகள்

பெங்களூரில் நடைபெறவுள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி!

இதற்கு முன்பு பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியை...

எழில்

கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான்.

2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் விளையாடவிருந்தது. ஆனால் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே வரலாற்று ரீதியிலான உறவு உள்ளதால் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்தியா முடிவெடுத்துள்ளது. 

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 14 அன்று பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் ஜுன் மாதம் எந்தவொரு டெஸ்ட் போட்டியும் நடந்ததில்லை. டெஸ்ட் போட்டிக்கு முன்பு 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கவுள்ளது. 

இதற்கு முன்பு பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியுள்ளன. இந்த வரிசையில் ஆப்கானிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT