ஐபிஎல்லையும் கிறிஸ் கெயிலையும் பிரிக்கமுடியாது. மகத்தான பல ஆட்டங்களை ஐபிஎல்-லில் அவர் நிகழ்த்தியுள்ளார். ஆனால், இந்த ஐபிஎல்-லில் அவரை எந்தவொரு அணியும் தேர்வு செய்யவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம். இதுபோல இன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பல ஆச்சர்யங்கள் நிகழ்ந்துள்ளன.
லசித் மலிங்கா, ஹசிம் ஆம்லா, முரளி விஜய் போன்ற பல வீரர்கள் ஏலத்தில் தேர்வாகாமல் போனார்கள். இந்த பட்டியலில் உள்ள வீரர்கள் அனைவரும் இதுவரையிலான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றவர்கள் ஆவர். மேலும் பெரும்பாலான புதுமுக வீரர்கள் ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்தாலும் இம்முறை ஏலத்தில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளனர்.
இன்றைய ஐபிஎல் ஏலத்தில் இதுவரை தேர்வாகாத பிரபல வீரர்கள்
- ஜேம்ஸ் ஃபாக்னர் (அடிப்படை விலை ரூ. 2 கோடி)
 - ஜாஷ் ஹாசில்வுட் (அடிப்படை விலை ரூ. 2 கோடி)
 - மிட்செல் ஜான்சன் (அடிப்படை விலை ரூ. 2 கோடி)
 - முரளி விஜய் (அடிப்படை விலை ரூ. 2 கோடி)
 - கிறிஸ் கெய்ல் (அடிப்படை விலை ரூ. 2 கோடி)
 - ஜானி பெர்ஸ்டோவ் (அடிப்படை விலை ரூ. 1.50 கோடி)
 - ஹசிம் ஆம்லா (அடிப்படை விலை ரூ. 1.50 கோடி)
 - ஜோ ரூட் (அடிப்படை விலை ரூ. 1.5 கோடி)
 - ஆடம் சாம்பா (அடிப்படை விலை ரூ. 1 கோடி)
 - பார்த்திவ் படேல் (அடிப்படை விலை ரூ. 1 கோடி)
 - சாம் பில்லிங்ஸ் (அடிப்படை விலை ரூ. 1 கோடி)
 - சாமுவோல் பத்ரி (அடிப்படை விலை ரூ. 1 கோடி)
 - டிம் சௌத்தி (அடிப்படை விலை ரூ. 1 கோடி)
 - மிட்செல் மெக்ளனேகன் (அடிப்படை விலை ரூ. 1 கோடி)
 - லசித் மலிங்கா (அடிப்படை விலை ரூ. 1 கோடி)
 - மார்டின் கப்தில் (அடிப்படை விலை ரூ. 75 லட்சம்)
 - நமன் ஓஜா (அடிப்படை விலை ரூ. 75 லட்சம்)
 - இஷாந்த் ஷர்மா (அடிப்படை விலை ரூ. 75 லட்சம்)
 - இஷ் சோதி (அடிப்படை விலை ரூ. 50 லட்சம்)
 - பென் மெக்டெர்மாட் (அடிப்படை விலை ரூ. 30 லட்சம்)
 - அங்குஷ் பெய்ன்ஸ் (அடிப்படை விலை ரூ. 20 லட்சம்)
 - ஆதித்ய தாரே (அடிப்படை விலை ரூ. 20 லட்சம்)
 - நிகில் ஷங்கர் நாயக் (அடிப்படை விலை ரூ. 20 லட்சம்)
 - சித்தேஷ் தினேஷ் லாட் (அடிப்படை விலை ரூ. 20 லட்சம்)
 - ஷிவம் துபே (அடிப்படை விலை ரூ. 20 லட்சம்)
 - ஜிதேஷ் ஷர்மா (அடிப்படை விலை ரூ. 20 லட்சம்)
 - விஷ்ணு விநோத் (அடிப்படை விலை ரூ. 20 லட்சம்)
 - ஷெல்டன் ஜாக்சன் (அடிப்படை விலை ரூ. 20 லட்சம்)
 - பிரஷாந்த் சோப்ரா (அடிப்படை விலை ரூ. 20 லட்சம்)
 - ஹிமானுஷ் ராணா (அடிப்படை விலை ரூ. 20 லட்சம்)
 - ரஜ்னீஷ் குர்பானி (அடிப்படை விலை ரூ. 20 லட்சம்)