முகப்பு
செய்திகள்

ட்விட்டரில் சுவாரசியமாக உரையாடிக்கொண்ட சச்சின் டெண்டுல்கரும் ரோஜர் ஃபெடரரும்!

நீங்கள் 9-வது விம்பிள்டன் பட்டத்தை வென்றபிறகு நாம் இருவரும் கிரிக்கெட், டென்னிஸ் குறித்து...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:12 PM
பகிர்:

சச்சினும் ரோஜர் ஃபெடரரும் உரையாடியதைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு நேற்று கிடைத்தது.

விம்பிள்டனில் தற்போது விளையாடி வரும் ஃபெடரர், ஓர் ஆட்டத்தில் கிரிக்கெட்டில் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்துவது போல ஒரு ஷாட்டை ஆடினார். இதையடுத்து இந்த விடியோவைக் கண்ட சச்சின், ஃபெடரருக்கு ட்வீட் செய்தார்.

எப்போதும்போல கைகளும் கண்களும் ஒருங்கிணைந்து அற்புதமாக விளையாடியுள்ளார். ஃபெடரர், நீங்கள் 9-வது விம்பிள்டன் பட்டத்தை வென்றபிறகு நாம் இருவரும் கிரிக்கெட், டென்னிஸ் குறித்து அவரவர் குறிப்புகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்றார். 

Advertisement

ஆனால், அதுவரைக்கும் எல்லாம் ஃபெடரர் பொறுமையாக இருக்கவில்லை. உடனடியாகப் பதிலளித்தார்.

அதுவரை ஏன் பொறுமையாக இருக்க வேண்டும். நான் குறிப்புகள் எடுத்துக்கொள்ள தயாராக உள்ளேன் என்றார்.

இவர்கள் உரையாடலில் கலந்துகொண்ட ஐசிசி, ஃபெடரரை நெ.1 டெஸ்ட் வீரராக எண்ணி கற்பனையாகப் படம் வெளியிட்டது. சச்சின் - ஃபெடரர் இடையிலான உரையாடல் வரும் நாள்களில் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments