முகப்பு
செய்திகள்

டெஸ்ட்: வங்கதேசத்திடமும் தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி!

முதல் இன்னிங்ஸில் 167 பந்துகளில் 120 ரன்கள் எடுத்த மோமினுல் ஹக், ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:42 PM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுவதுமாகத் தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி (0-2), அடுத்ததாக வங்கதேச அணியிடமும் முதல் டெஸ்டில் தோல்வியடைந்துள்ளது.

சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்டில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி, 324 ரன்களும் மே.இ. அணி 246 ரன்களும் எடுத்தன. முதல் இன்னிங்ஸில் 78 ரன்கள் முன்னிலை பெற்றபோது வங்கதேச அணி தனது 2-வது இன்னிங்ஸில் 125 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் மே.இ. அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முயன்றால் அடையக்கூடிய இலக்கு தான். ஆனால் மோசமான பேட்டிங்கினால் தனது 2-வது இன்னிங்ஸில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மே.இ. அணி. 4 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் என தொடக்கமே மோசமாக அமைந்ததால் அதிலிருந்து மே.இ. அணியால் மீள முடியாமல் போனது. இதனால் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

Advertisement

முதல் இன்னிங்ஸில் 167 பந்துகளில் 120 ரன்கள் எடுத்த மோமினுல் ஹக், ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், நவம்பர் 30 அன்று தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments