செய்திகள்

மே.இ. அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: சதம் அடித்தார் அங்கித் பாவ்னே!

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், பிசிசிஐ (போர்டு பிரசிடெண்ட் லெவன்) அணிக்கும் இடையிலான பயிற்சி ஆட்டம் வதோதராவில் இன்று தொடங்கியுள்ளது. 2 நாள்கள் மட்டுமே இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற பிசிசிஐ அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிருத்வி ஷா, 8 ரன்களில் ஆட்டமிழந்தார். நல்ல ஃபார்மில் இருக்கும் மயங்க் அகர்வால், 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு ஷ்ரேயஸ் ஐயர் 61 ரன்கள் எடுத்தார். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 25 வயது அங்கித் பாவ்னே, சிறப்பாக விளையாடி சதமெடுத்தார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் போர்டு பிரசிடெண்ட் லெவன் அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்துள்ளது. அங்கித் பாவ்னே 116, ஜலஜ் சக்ஸேனா 18 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். மே.இ. அணித் தரப்பில் பிஷூ  3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, அக்டோபர் 4-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT