செய்திகள்

உலகக் கோப்பை: இந்திய அணியின் மாற்று வீரர்களாக ரிஷப் பந்த் உள்பட மூவர் தேர்வு!

முதலில் அறிவிக்கப்பட்ட 15 பேரில் யாருக்காவது காயம் ஏற்பட்டால்...

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் அறிவித்தது பிசிசிஐ. 2015 உலகக் கோப்பையில் இடம்பெற்ற தோனி, தவன், ஜடேஜா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார், முஹமது ஷமி, ரோஹித் சர்மா ஆகிய 7 வீரர்களுக்கு இந்தமுறையும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இரு தமிழ்நாட்டு வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறாத ரிஷப் பந்த், ராயுடு, வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி ஆகிய மூன்று வீரர்களும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். முதலில் அறிவிக்கப்பட்ட 15 பேரில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், இந்த மூவரிலிருந்து ஒருவர் அணியில் நுழைக்கப்படுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT