முகப்பு
செய்திகள்

கிரிக்கெட் உலகம் வியந்து பாராட்டும் பென் ஸ்டோக்ஸின் நம்பமுடியாத ஆட்டத்தின் விடியோ!

ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றியைச் சாத்தியமாக்கினார்... 

Updated On : 26 ஆகஸ்ட், 2019 at 2:56 PM
பகிர்:

ஆஷஸ் தொடர் 3-ஆவது டெஸ்ட்டில் தோல்வியின் விளிம்பில் இருந்து ஆஸி. அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்தது இங்கிலாந்து. இதன் மூலம் ஆஸி. அணியின் தொடரை கைப்பற்றும் முயற்சியை முறியடித்தது.

5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தை 251 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது ஆஸி. இரண்டாவது ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில் மூன்றாவது ஆட்டம் ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. 179 ரன்களுக்கும், இங்கிலாந்து வெறும் 67 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸி. அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்னஸ் லேபுச்சேன் மட்டுமே நிலைத்து ஆடி 80 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற் ரன்களுடன் வெளியேறினர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3-56 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனால் 3-வது டெஸ்டை இங்கிலாந்து அணி வெல்ல 359 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணி, 286 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆஸி. அணியின் வெற்றி உறுதி என இங்கிலாந்து ரசிகர்களும் நம்பத் தொடங்கினார்கள். ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸும் லீச்சும் நம்பமுடியாத வெற்றியை இங்கிலாந்து அணிக்குத் தந்தார்கள். கடைசியில் இங்கிலாந்து அணி, 125.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து வரலாற்று வெற்றியை அடைந்தது. அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பென் ஸ்டோக்ஸ் 8 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 219 பந்துகளில் 135 ரன்களை விளாசி களத்தில் இருந்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.