செய்திகள்

முதல் டி20: அதிரடியாக ரன்கள் குவிக்கும் நியூஸி. தொடக்க வீரர்கள்! 

நியூஸிலாந்து பவர்பிளேயில், 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது.

எழில்

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், ஒரு நாள் தொடர்களை வென்று சாதனை படைத்த இந்திய அணி, தொடர்ச்சியாக நியூஸிலாந்தில் ஒரு நாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது. ஏற்கெனவே ஒரு நாள் தொடரை 4-1 என கைப்பற்றியது இந்தியா. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டனில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவன், ரிஷப் பந்த், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், தோனி, ஹார்திக் பாண்டியா, கிருனாள் பாண்டியா, புவனேஸ்வர், சாஹல், கலீல் அஹமது ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

முதல் ஓவரில் மட்டும்தான் நியூஸி. தொடக்க வீரர்கள் சாந்தமாக விளையாடினார்கள். அதன்பிறகு சிக்ஸரும் பவுண்டரிகளும் பறந்தன. புவனேஸ்வர் குமார் வீசிய 3-வது ஓவரில் 15 ரன்கள் எடுத்தார்கள் சைய்ஃபர்டும் மன்ரோவும். கலீல் அஹமது வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர் அடித்தார் மன்ரோ. அந்த ஓவரில் 16 ரன்கள்! கிருனாள் பாண்டியா வீசிய 5-வது ஓவரில் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் எடுக்கப்பட்டது. என்ன செய்தால் இந்த ஜோடியைப் பிரிக்கமுடியும் என்று தவித்தார் ரோஹித் சர்மா. யார் பந்துவீசினாலும் அதை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விரட்ட இருவரும் தயாராக இருந்தார்கள். அடுத்த ஓவரில் பாண்டியா வீசினார். அதிலும் மாற்றம் எதுவும் இல்லை. 2 பவுண்டரிகள் உள்பட 12 ரன்கள் எடுத்தார்கள். 

நியூஸிலாந்து பவர்பிளேயில், 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது. மன்ரோ 32, சைய்ஃபர்ட் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை: விஜய்

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

பிகார் இளைஞரின் குடும்பத்தை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT