இந்திய மகளிர் டி20 அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
தற்போது ஒருநாள் தொடரில் ஆடி வரும் இங்கிலாந்து அடுத்து குவாஹாட்டியில் மார்ச் 4, 7, 9, தேதிகளில் நடைபெறவுள்ள 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
இந்திய டி20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் காயமடைந்ததால், அவருக்கு பதிலாக ஸ்மிருதி மந்தானா கேப்டனாக பொறுப்பு வகிப்பார்.
அணி விவரம்: ஸ்மிருதி மந்தானா (கேப்டன்), மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, தனியா பாட்டியா, பார்தி புல்மாலி, அனுஜா பட்டீல், ஷிகா பாண்டே, கோமல் ஜன்ஸாட், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லின் தியோல்.